திருவெண்ணெய்நல்லுா : திருவெண்ணெய்நல்லுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சண்முகம் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபாகரன், ஆர்.டி.ஓ., ரஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் காண்டீபன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் அமைச்சர் சண்முகம் மற்றும் எம்.எல்.ஏ., குமரகுரு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திருவெண்ணெய்நல்லுார், டி.எடையார், ஏமப்பூர், பாவந்துார், செம்மார் ஆகிய பகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டை தாரர்களுக்கு வேட்டி, சேலை, பச்சரிசி, கரும்பு, ரூ 2500 பணம் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினர்.
வடக்கு ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், முன்னாள் நகர செயலாளர் சரவணக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் ஸ்ரீதர், மாவட்ட ஆவின் துணை தலைவர் சேகர், ஒன்றிய இணை செயலாளர் சிவகாமி முருகதாஸ், ஒன்றிய மாணவரணி செயலாளர் உதயகுமார், நகர அவைத்தலைவர் வேலாயுதம், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சுந்தரம், ஜ.டி பிரிவு நகர செயலாளர் பாலு பாஸ்கர், கிராம வங்கி தலைவர் செல்வமுருகன்.
துணை தலைவர் முருகன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் நாகவல்லி ஆறுமுகம் மற்றும் இயக்குனர்கள் தங்க கலியபெருமாள், உஷா, முருகன் , சிவகாமி சேட்டு மற்றும் எமப்பூர் கூட்டுறவு சங்க தலைவர் முனியன், துரைராஜ், தேவநாதன், கிருஷ்ணமூர்த்தி, பாபு, ஊராட்சி செயலாளர்கள் தங்கராஜ், ஏழுமலை, சடையாண்டி மற்றும் கிளை செயலாளர் மாயவன், மணிகண்டன், கோதண்டபாணி, தனசேகர், சேகர், அருள்தாஸ், வெற்றிசெல்வன், ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE