சின்னசேலம் : சின்னசேலம் அருகே மர்ம விலங்குகளால் ஆடுகள் இறந்ததையடுத்து, கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வருவாய்துறையினர் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்தனர்.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன்,47; இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 21 ஆடுகள், 15 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 8 ஆடுகள் மர்ம விலங்கு தாக்கியதில் இறந்தன.இந்நிலையில் நேற்று மேலும் ஆறு ஆடுகள் இறந்துள்ளது. மீதமுள்ள ஆடுகள் மருத்துவரின் சிகிச்சையில் உள்ளது.
இதனையடுத்து,கனியாமூர் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு வருவாய்துறையினர் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில், இந்த கிராமத்தில் மர்ம விலங்குகள் நடமாட்டம் உள்ளது. அதனால் பொதுமக்கள் இரவில், தேவையில்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம் எனவும், கால்நடைகளை மிக கவனத்துடன் பார்த்துக்கொள்ளவேண்டும் என தண்டோரா போட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE