திருக்கோவிலூர் : தி.மு.க., ஆட்சியில் பல மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதேபோல் மீண்டும் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., ஆட்சி மலர்ந்தவுடன் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., பேசினார்.
திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கொல்லூர், புத்தூர், மேலக்கொண்டூர் ஊராட்சிகளில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் தி.மு.க,. துணை பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ., பொன்முடி பேசியதாவது.விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மக்கள் கிராமசபை கூட்டங்களில் பேசி வருகிறேன். அனைத்து இடங்களிலும் மக்கள் தன்னெழுச்சியாக கலந்து கொள்கின்றனர்.அ.தி.மு.க., அரசின் ஊழலுக்கு எதிராக மக்கள் முழக்கமிட்டு வருவதைக் காண முடிகிறது.
ஸ்டாலின் முதல்வரானவுடன் மகளிர் சுய உதவி குழு சுழல் நிதியாக இருந்தாலும், மாணவர் களுக்கு கல்விக் கடனாக இருந்தாலும், நுழைவுத்தேர்வு ரத்தாக இருந்தாலும் அனைத்து நல்ல அம்சங்களும் நிறைவேற்றப்படும்.விழுப்புரம் பிரமாண்ட பஸ் நிலையம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, நீதிமன்றம், அனைத்து அலுவலகங்கள் இருக்கும் பெருந்திட்ட வளாகம், அண்ணா பொறியியல் கல்லூரி.திருக்கோவிலூர் தொகுதியை பொறுத்தவரையில் அரகண்ட நல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, திருவெண்ணெய்நல்லூரில் அரசு கலைக்கல்லூரி, அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி, சிமெண்ட் சாலைகள் என பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறோம்.
நியாயமான மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஸ்டாலின் முதல்வரானவுடன் நிறைவேற்றப்படும்.இவ்வாறு என பொன்முடி பேசினார்.நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE