கள்ளக்குறிச்சி : செம்பொற்சோதிநாதர் கோவிலில் அழகீசர் - அங்கையற்கண்ணி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசு நாயனார் உழவார திருக்கூட்டத்தின் 32 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டியும், செம்பொற்சோதிநாதர் கோவில் திருக்குட நன்னீராட்டு 7 வது ஆண்டு விழாவினையொட்டியும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கோவில் பசுக்கள் கயிலை, நந்தினிக்கு கோ பூஜை நடந்தது. 6 மணிக்கு செம்பொற் சோதி நாதருக்கு மார்கழி மாத திருவெம்பாவை வழிபாடு செய்யப்பட்டு, அழகீசர் - அங்கையற்கண்ணி சுவாமிகளை விழா மேடையில் எழுந்தருள செய்தனர்.
தொடர்ந்து வேள்வி வழிபாடு, திருக்குடநன்னீராட்டு, மகாஅபிேஷகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருமாங்கல்ய வழிபாடு நடந்தது. கயிலை வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.கோவை மணிவாசகர் அருட்பணி மன்ற குமரலிங்கம் மற்றும் குழுவினர் நிகழ்ச்சிகளை செய்தனர். திருநாவுக்கரசர் திருமடம் நாச்சியப்பன் ஏற்பாடுகளை செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE