பொது செய்தி

தமிழ்நாடு

பெருமாள் கோவிலில் மோட்ச உற்சவம்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நேற்று நடந்தது. திருப்பதியின் ஏற்றம் கொண்ட கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நேற்று மாலை நடந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 25ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடந்த ராப்பத்து நிகழ்ச்சி நேற்றுடன்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நேற்று நடந்தது.

திருப்பதியின் ஏற்றம் கொண்ட கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நேற்று மாலை நடந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 25ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடந்த ராப்பத்து நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.இதனையொட்டி நேற்று மாலை நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நடந்தது. பெருமாள், தாயார், ஆழ்வார்கள் உற்சவர்களுக்கு திருமஞ்சனம், அபிஷேகங்கள் செய்து, சிறப்பு அலங்காரத்துடன் மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து சாற்றுமுறை, சேவை, வேதபாராயணம், ஆராதனைகள் நடந்தது. கோவில் குருக்கள் தேசிகபட்டர் பூஜைகளை செய்து வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X