சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு மாவட்டத்தில் 5,346 பேர் 'ஆப்சென்ட்'

Added : ஜன 04, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் பகுதியில் நடந்த குரூப் 1 முதனிலைத்தேர்வை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 69 துணை கலெக்டர் பணியிடங்களுக்கான குரூப் 1 முதனிலைத்தேர்வு நேற்று நடந்தது. விழுப்புரம் தாலுகா மற்றும் விக்கிரவாண்டி தாலுகாவில் 39 தேர்வு மையங்களில் 10,738 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.இவர்களில் நேற்று

விழுப்புரம் : விழுப்புரம் பகுதியில் நடந்த குரூப் 1 முதனிலைத்தேர்வை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 69 துணை கலெக்டர் பணியிடங்களுக்கான குரூப் 1 முதனிலைத்தேர்வு நேற்று நடந்தது. விழுப்புரம் தாலுகா மற்றும் விக்கிரவாண்டி தாலுகாவில் 39 தேர்வு மையங்களில் 10,738 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.இவர்களில் நேற்று நடந்த தேர்வில், 5,392 பேர் தேர்வு எழுத வருகை புரிந்தனர். மீதமுள்ள, 5,346 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு மையங்களை கண்காணிக்க துணை கலெக்டர் நிலையில் 3 பறக்கும் படை அலுவலர்கள், தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 7 நடமாடும் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரி மற்றும் கப்பியாம்புலியூர் ஏ.ஆர்.,பொறியியல் கல்லுாரியில் நடந்த தேர்வை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, டி.ஆர்.ஓ., (பொறுப்பு) சரஸ்வதி உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X