வானூர் : குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி ராயப்புதுப்பாக்கம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு அனுப்பியுள்ள மனு: வானூர் ஒன்றியத்திற்குட்பட்டு ராயப்புதுப்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கானகுடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் ஒரு பகுதி பள்ளத்திலும், மற்றொரு பகுதி மேட்டிலும் அமைந்துள்ளது.இப்பகுதிக்கு காலைஒருவேளை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், பள்ளமான பகுதியில் வசித்து வரும் மக்கள், குடிநீரை, மின்மோட்டார் வைத்து,பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இதனால் மேட்டுப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது குறித்து வானூர் பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே வீடுகளில் தேவைக்கு அதிகமாக அனுமதியின்றி, மோட்டார் அமைத்து தண்ணீர்பிடிப்பதை தடுக்கவும், மேட்டுப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE