விழுப்புரம் : வன்முறையை துாண் டும் வகையில், எதிர்கட்சி தலைவர் பொறுப்பை உணராமல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகிறார் என அமைச்சர் சண்முகம் பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் சண்முகம் பேசியதாவது:தி.மு.க., என்பது கட்சியல்ல, தனியார் நிறுவனம். தி.மு.க.,வில் பொன்முடி உள்ளிட்டோர் ஏஜெண்டுகளாகவும், துரைமுருகன் முதன்மை ஏஜெண்டாகவும் செயல்பட்டு வருகின்றனர். நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறி 39 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றனர். இதில், கனிமொழி உட்பட எந்த எம்.பி., யாவது டில்லியில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து பேசினார்களா.
கிராம சபை கூட்டம் நடத்த ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. பொது இடத்தில் கூட்டம் கூட்டினால், யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்பார்கள். அப்படி, கோவையில் கேள்வி எழுப்பிய பெண் மீது ஸ்டாலின் முன்னிலை யில் தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களின் கேள்விக்கு பதில ளிக்காத ஸ்டாலினுக்கு, தலைவர் தகுதி இல்லை.அ.தி.மு.க., நினைத்தால் தி.மு.க., வினர் வேட்டி கூட கட்ட முடியாது. எதிர்கட்சி தலைவர் என்ற பொறுப்பை உணராமல் வன்முறையை துாண்டும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.
தி.மு.க.,வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பி வாருங்கள் பாக்கலாம். ஸ்டாலின் அச்சுறுத்துவது, மிரட்டுவதை எல்லாம் கூட்டணி கட்சிகளிடம் வைத்து கொள்ளட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE