பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து விதி மீறியதாக 7.89 லட்சம் வழக்குப்பதிவு

Added : ஜன 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக, 7.89 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2.22 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து எஸ்.பி., தங்கதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் கடந்த ஆண்டில், ஒன்பது வழிப்பறி கொள்ளை நடந்ததில், எட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அனைத்து சொத்துகளும்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக, 7.89 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2.22 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து எஸ்.பி., தங்கதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் கடந்த ஆண்டில், ஒன்பது வழிப்பறி கொள்ளை நடந்ததில், எட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அனைத்து சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளது. பெருங்குற்ற திருட்டு வழக்குகளை பொறுத்தவரை, 85 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாகன திருட்டு, கால்நடை திருட்டு, வேறுவகை திருட்டு என, 292 வழக்குகள் பதிந்து, 225 வழக்குகளில் துப்பு துலக்கப்பட்டுள்ளது. 39 கொலை குற்றங்களில், 38 கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 62 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான, 242 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 133 சாலை விபத்துகளில், 154 பலியாகி உள்ளனர். வாகன விதிமீறல் தொடர்பாக, ஏழு லட்சத்து, 89 ஆயிரத்து, 382 வழக்குகள் பதியப்பட்டு, இரண்டு கோடியே, 22 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, 12 ஆயிரத்து, 149 இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X