பொது செய்தி

இந்தியா

இப்படி அறிக்கை அளிக்க, 'ரூம் போட்டு' யோசித்திருப்பீர்களோ...

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
பிரதமர் மோடி, தமிழ் மொழி குறித்து பாராட்டி பேசுவது, தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் ஆபத்து வருகிறது என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.- தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்'இப்படி அறிக்கை அளிக்க, 'ரூம் போட்டு' யோசித்திருப்பீர்களோ... உங்களைப் போன்ற, 'தலைவர்களை' பெற்றிருக்க, தமிழகம், 'கொடுத்து' வைத்திருக்க வேண்டும்...' என, சொல்லத்
இப்படி அறிக்கை அளிக்க, 'ரூம் போட்டு' யோசித்திருப்பீர்களோ...

பிரதமர் மோடி, தமிழ் மொழி குறித்து பாராட்டி பேசுவது, தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் ஆபத்து வருகிறது என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.
- தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்


'இப்படி அறிக்கை அளிக்க, 'ரூம் போட்டு' யோசித்திருப்பீர்களோ... உங்களைப் போன்ற, 'தலைவர்களை' பெற்றிருக்க, தமிழகம், 'கொடுத்து' வைத்திருக்க வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை.



நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர் -- அரசு ஊழியர்கள், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய பிறகும், தமிழக அரசு அவர்களை பழிவாங்குவது கண்டனத்திற்கு உரியதாகும்.
- மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன்


'போராட துாண்டுவது, உங்களைப் போன்ற கட்சிகள்; பாதிக்கப்படுவது அரசு ஊழியர்கள்...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.



தமிழத்தில் நல்லாட்சி தரும், அ.தி.மு.க.,விற்கு தான், மக்களின் ஆதரவு உள்ளது. 30 ஆண்டுகள், தமிழகத்தில் ஆட்சி புரிந்தது, அ.தி.மு.க., தான். முதல்வர் இ.பி.எஸ்., எதார்த்தமாக செயல்படுகிறார்; மற்ற கட்சியினரை போல், ஆடரம்பரத்துடன் மக்களை சந்திக்கவில்லை.
- தமிழக கிராம தொழில்கள் துறை அமைச்சர் பெஞ்சமின்


'நல்லாட்சி தந்தால், ஏன் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும்; மக்களாக ஓட்டு போட்டு விட மாட்டார்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக கிராம தொழில்கள் துறை அமைச்சர் பெஞ்சமின் பேட்டி.



காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வடகலை, தென்கலை மோதல். ஹிந்துக்களை ஒன்றுபடச் சொல்லும் சங் பரிவார்களே, முதலில் இவர்களை ஒன்றுபடச் சொல்லுங்கள்!
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன்


latest tamil news




'முதலில், பத்து பிரிவுகளாக பிரிந்துள்ள, கம்யூ.,க்கள் ஒன்றுபடட்டும்; அதன் பின் பார்க்கலாம்...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை.



ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாததால், அரசியலில் ஈடுபடாமல் இருப்பது என்ற முடிவே சரி என்று கூறும், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஸ்டாலின், சோனியா உடல் நிலை குறித்து கவலைப்படாதது ஏன்?
- தமிழக, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'அவ்விரு கட்சிகளில், அவர்கள் இருவரை விட்டால், வேறு தலைவர்கள் இல்லை என்பது காரணமாக இருக்குமோ...' என, எதிர்கேள்வி கேட்கத் தோன்றும் வகையில், தமிழக, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.



தமிழகத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்த தொழிலாளர்களுக்கு, நான்கு மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இது, அவர்களுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. உடனே, வழங்க வேண்டும்.
- விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலர் பழனிசாமி


'அப்பாவி, நுாறு நாள் தொழிலாளர்கள் சம்பளத்தை கொடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலர் பழனிசாமி அறிக்கை.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜன-202117:18:42 IST Report Abuse
நானும் தமிழனே கடந்த 5 ஆண்டில் பல்லிளித்து கிடந்த பல சாலைகளை ஐயா பெஞ்சமின் மதுரவாயல் பகுதியில் ராவோட ராவா அவசர கதியில் போட வேண்டிய அவசியம் என்ன?
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
04-ஜன-202117:09:22 IST Report Abuse
S.Ganesan தமிழ் நாட்டில் உள்ள கோமாளித்தனமான அரசியல்வாதிகள் இருக்கும்வரை தமிழை வேறு யாரும் அழிக்க முற்பட வேண்டாம். இவர்களே போதும்
Rate this:
Cancel
irudayam fernando - Pamban,இந்தியா
04-ஜன-202116:22:43 IST Report Abuse
irudayam fernando திறந்த மனதுடன் பிஜேபி கு சப்போர்ட் பண்ணுகின்றது
Rate this:
சரவணன் - Madurai,இந்தியா
04-ஜன-202118:39:36 IST Report Abuse
சரவணன்நல்ல விஷயம் தானே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X