ஈரோடு: ஈரோட்டில் ஓடும் காரில், டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி, இருவர் மீது மோதியது. மூன்று டூவீலர்கள் சேதமாகின.
ஈரோடு, பெரியவலசை சேர்ந்தவர் சுரேஷ், 35; வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள சினிமா தியேட்டர் உரிமையாளர். நேற்று மதியம், 1:30 மணியளவில் காரில் தனியாக, ஈரோடு - நசியனூர் சாலையில் சென்றார். நாராயணவலசு அருகே திடீரென வலிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் நடந்து சென்ற, ஈரோடு, நல்லிதோட்டம் பகுதி ராமன், 35, முத்தையா, 65, மீது மோதியது. அப்போதும் நிற்காமல், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று டூவீலர்கள் மீது மோதி நின்றது. அப்பகுதி மக்கள், கார் கண்ணாடியை உடைத்து சுரேஷ், காயமடைந்த இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதிர்ஷ்டவசமாக, டிரான்ஸ்பார்மர் மீது மோதாமல் நின்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE