மொடக்குறிச்சி: கொடுமுடி அருகே மலையம்பாளையம் மெயின் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார், 37; அரசு போக்குவரத்து கழகத்தில், கருமத்தம்பட்டி கிளை கண்டக்டர். குடும்ப சூழலால், பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதுகுறித்து மனைவி நந்தினி, 35, குடும்பத்தாரிடம் புலம்பியபடி இருந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளானார். வேலைக்கும் செல்லாமல் வீட்டில் முடங்கினார். கடந்த, 29ம் தேதி மாலை, குடும்பத்தாரிடம் பேசிக்கொண்டிருந்த விஜயகுமார், திடீரென வீட்டில் புகுந்து கதவை சாத்திக்கொண்டார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை தள்ளி திறக்க முற்பட்டனர். பலமுறை தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தபோது, மின்விசிறியில் சேலையில் தூக்கிட்ட நிலையில் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து மலையம் பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE