மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, ஈஞ்சம்பள்ளி, பி.கே.வலசு அருகே, வடக்கு பொன்னம்பாளையத்தை சேர்ந்தவர் பாவாத்தாள், 80; கூலி தொழிலாளியான இவர், ஆடு வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, ஆடுகளுக்கு தழை ஒடித்து வர சென்றார். கிணற்றை ஒட்டி நின்று தழை ஒடித்தபோது, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் பலியானார். மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான வீரர்கள், மூதாட்டி உடலை மீட்டனர். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE