அரூர்: அரூரில், நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருவதால், சாக்கு பைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டில் பெய்த மழையால், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர், பொம்மிடி, தீர்த்தமலை, நரிப்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். மழைநீரில் மூழ்கி சேதமானது போக, மீதமுள்ள பயிர்களை அறுவடை செய்யும் பணி தற்போது, மும்முரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்லை சுத்தம் செய்து பாதுகாப்பாக சேமிக்க, இருப்பு வைக்க மற்றும் வியாபாரத்துக்காக மொத்தமாக எடுத்து செல்ல, சாக்குப்பைகள் பயன்படுத்தப் படுகிறது. இதனால், அரூரில், சாக்குப்பைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு, விலையும் அதிகரித்துள்ளது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: அறுவடை தீவிரமாக நடந்து வருவதால், சாக்குப்பைகளின் தேவை அதிகமாகி விட்டது. அதனால், கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய சர்க்கரை சாக்குப்பை, 150 ரூபாய், பழைய சாக்குப்பை, 80 ரூபாய் மற்றும் பிளாஸ்டிக் சாக்குப்பை, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அறுவடை சீசன் மார்ச் இறுதி வரை நீடிக்கும் என்பதால், விலை மேலும் அதிகரித்து, சாக்குப்பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE