ஓசூர்: ஓசூர் அடுத்த, பாகலூர் பஞ்.,ல், 70.97 லட்சம் ரூபாய் மதிப்பில், வளர்ச்சி பணிகள் துவங்கி வைக்கப்பட்டன. ஓசூர், ஒன்றிய பொதுநிதியில் இருந்து, பாகலூர் பஞ்.,க்கு உட்பட்ட ஆதி திராவிடர் காலனியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதேபோல், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சசிவெங்கடசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் மையத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆதி திராவிடர் காலனியில், 48.97 லட்சத்து, 97 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார், பாகலூர் பஞ்., தலைவர் ஜெயராமன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE