பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், கிராம கோவில் பூசாரிகள் சமூக நலப்பேரவை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. மாநில துணைத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். அகில பாரத சன்னியாசிகள் சங்க பொதுச்செயலாளர் ஆத்மானந்தா சரஸ்வதி, சதுரகிரி மலை ஆஞ்சநேயர் சுவாமிகள் ஆகியோர் பேசினர்.எம்.எல்.ஏ., சந்திரசேகரன், நலத்திட்ட

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், கிராம கோவில் பூசாரிகள் சமூக நலப்பேரவை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. மாநில துணைத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். அகில பாரத சன்னியாசிகள் சங்க பொதுச்செயலாளர் ஆத்மானந்தா சரஸ்வதி, சதுரகிரி மலை ஆஞ்சநேயர் சுவாமிகள் ஆகியோர் பேசினர்.எம்.எல்.ஏ., சந்திரசேகரன், நலத்திட்ட உதவி வழங்கினார். கூட்டத்தில், 60 வயது கடந்த பூசாரிகளுக்கு, மாத ஊதியம், 1,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிய, முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள, கிராம கோவில் பூசாரிகளின் குடும்பத்தில், படித்த குழந்தைகளுக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். செயல்படாமல் இருக்கும், கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும். நைனாமலையில் உள்ள, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, பக்தர்கள் தானமாக வழங்கும் பசு மற்றும் கன்றுகளை, பூசாரிகள் சமூக நல பேரவையில் உள்ள, ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X