நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து ரேஷன் கடைகளிலும், பொங்கல் பரிசு தொகுப்பு பேக்கிங் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி வாங்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், 2,500 ரூபாய் ரொக்க பணத்துடன், முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை, முழு கரும்பு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை வினியோகிக்கப்படும் என, தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு இன்று முதல், 12 வரை தொடர்ந்து வழங்கப்படும். காலையில், 100 பேருக்கும், மதியம், 100 பேருக்கும் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 900 ரேஷன் கடைகள் மூலம், 5 லட்சத்து, 20 ஆயிரத்து, 200 ரேஷன் கார்டுதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பை, பேக்கிங் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரொக்க பணம் கூட்டுறவு வங்கிகளில் இருந்து, விற்பனையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE