பள்ளிபாளையம்: பொதுமக்களை தேடி சென்று, அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்குவதற்கு, நடமாடும் சூப்பர் சேவை மையம் துவக்கி வைக்கப்பட்டது. வருமானம், ஜாதி, பிறப்பு, வாரிசு மற்றும் விவசாயி வருமானம் சான்று உள்ளிட்ட, பல்வேறு சான்றிதழ்களை பெற, இ-சேவை மையத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இதற்கு கட்டணம், 60 ரூபாய் செலுத்த வேண்டும். குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட மக்கள் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் செயல்படும், இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். இதனால், வேலைக்கு செல்ல முடியாமல் போகிறது. தற்போது, இ-சேவை மையத்தை நோக்கி மக்கள் சென்ற காலம் மாறி, மக்களை நோக்கி குமாரபாளையம் தொகுதியில் உள்ள, அனைத்து ஊராட்சிகளுக்கும், நேரடியாக செல்லும் நடமாடும் இ-சேவை மையம் செல்கிறது. இந்த சேவை மையத்தை, நேற்று அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். இது, ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களிடம், பதிவு கட்டணம் இல்லாமல், இலவசமாக விண்ணப்பங்கள் பதிவு செய்து, ஓரிரு நாளில் அதற்கான சான்றிதழை பதிவு செய்த இடங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். துவக்க விழாவில், பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், நகர பேரவை செயலாளர் சுப்ரமணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE