சாலையோர கடைகளால் போக்குவரத்து இடையூறு

Added : ஜன 04, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சாலையோர கடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. குமாரபாளையம், சேலம் சாலை ஸ்டேட் வங்கி பகுதியில், சாலையோரத்தின் இருபுறமும் துணிக்கடை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவில் டிவைடர் வைக்கப்பட்டுள்ளதால், சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இதன் ஒரு புறம் வடிகால் அமைக்க சாலை அடைக்கப்பட்டுள்ளது. ஒரே பக்கமாக அனைத்து வாகனங்களும் சென்று

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சாலையோர கடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. குமாரபாளையம், சேலம் சாலை ஸ்டேட் வங்கி பகுதியில், சாலையோரத்தின் இருபுறமும் துணிக்கடை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவில் டிவைடர் வைக்கப்பட்டுள்ளதால், சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இதன் ஒரு புறம் வடிகால் அமைக்க சாலை அடைக்கப்பட்டுள்ளது. ஒரே பக்கமாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. சாலையோர கடைகளால் போதிய இட வசதி இல்லாமல் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றால் டூவீலர் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. துணி வாங்க வரும் பொதுமக்கள் நிறுத்தும் டூவீலர்கள் குறுகிய சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. சாலையில் நின்று துணிகள் வாங்கும் பொதுமக்கள், சாலையில் வாகனங்கள் வருவதை கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்படுவதால், விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X