பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கல்லூரிகள், பல்கலை திறப்பு

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று (ஜன.,4) முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன.கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஜூன் 1-ம் தேதி முதல் கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் 10
Kerala, College, Reopen, Universities, Puducherry, கேரளா, பல்கலை, கல்லூரிகள், திறப்பு, புதுச்சேரி, பள்ளிகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று (ஜன.,4) முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன.

கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஜூன் 1-ம் தேதி முதல் கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோல கல்லூரிகள், தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் ஜனவரி 4ம் தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


latest tamil news


அதன்படி இன்று முதல் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகள், சட்டம், இசை, நுண்கலை, பாலிடெக்னிக் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக இளங்கலையில் இறுதியாண்டு மாணவர்கள், முதுகலையில் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுபோல பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்குகின்றன.


latest tamil news


சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் உண்டு. அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலை.,கள் காலை 8:30 முதல் மாலை 5 மணிவரை செயல்பட வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 5 மணிநேர வகுப்பு மட்டுமே. தேவைப்பட்டால் 2 ஷிப்ட்களாக பிரித்து வகுப்புகளை நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டன, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sutha - Chennai,இந்தியா
05-ஜன-202106:01:07 IST Report Abuse
Sutha கேரளாவில் தினமும் 5000க்கு மேற்பட்டோருக்கு கோவிட் பரவல் இருந்து வரும் நிலையில் பள்ளி,கல்லூரிகள் திறக்கப் படுகிறது.தமிழ் நாட்டோடு ஒப்பிட்டால் அங்கு 15000பேருக்கு தினமும் தோற்று இருப்பதாகக் கொள்ளலாம்.ஆனால் தமிழ் நாட்டில் மாணவர்களின் நலன் பற்றி யோசிக்காத ஓரு அரசாங்கமாக இருப்பது வருத்தத்துக்கு உரியது.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
04-ஜன-202116:00:23 IST Report Abuse
Rengaraj ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்துகிறார். கூட்டம் கூடுகிறது. முதல்வர் பிரச்சாரம் செய்கிறார். கூட்டம் அள்ளுகிறது. கமலஹாசன் ஊர் ஊராய் அலைகிறார். கூட்டத்தை கூட்டுகிறார். பற்றாக்குறைக்கு கொஞ்சநாளைக்கு முன்னாள் வரை முருகன் வேல் யாத்திரை செய்தார். அவரும் அவர் பங்குக்கு கூட்டம் சேர்த்தார். நேற்று திரு அழகிரி அவர்கள் மதுரையில் அவர் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டினார். வெவ்வேறு ஊர்களில் இருந்து அணிதிரண்டு வந்ததாக செய்திகள் கூறின. நூறு சதவீதம் இருக்கைகளோடு சினிமா தியேட்டர்கள் நடத்தலாம் என்று அறிவிப்பு வந்தாச்சு. கோவில் பகதர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பழனி பாதயாத்திரைக்கு மக்கள் நடந்து சென்றவண்ணம் உள்ளனர். கல்யாணவீடுகள் , கிரஹப்ரவேச வீடுகள் களைகட்டுகிறது. டீக்கடைகளோ , வடை பஜ்ஜி கடைகளோ ஹோட்டல்களோ , அடேங்கப்பா கேட்கவே வேண்டாம். யாரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டில் அடைந்து கிடைக்கவில்லை என்பதை பறைசாற்றுகின்றன. பஸ்களிலும் ஷேர் ஆட்டோக்களிலும் மக்கள் திணிக்கப்பட்டு செல்கிறார்கள். ஆனானப்பட்ட புதுச்சேரி கூட ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிக்கூடங்களை திறந்து விட்டது ஆனால் நம் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி திறந்தால் கொரோனா வந்துவிடும் என்று திறக்காமல் ஏதேதோ சாக்கு போக்கு சொல்கின்றனர். தேர்தல் ஜுரம் வந்து ஆட்சியாளர்களும் கட்சிக்காரர்களும் இந்த கொரோன மேல் பழிபோட்டு பிதற்றிக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே - எம்.ஜி ஆர் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொன்னால் மட்டும் அவர் மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. இங்கு என்ன சிஸ்டம் நடக்கிறது என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
Jayaraman Sekar - Bangalore,இந்தியா
04-ஜன-202115:19:53 IST Report Abuse
Jayaraman Sekar தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி == கமால் ஹும் ஸ்டார்ட் .. எடப்பாடிய திட்ட ஆரம்பிக்கலாம் .... கேரளாவில் கல்லூரிகள், பல்கலை திறப்பு === விஜெயன பாராட்ட அரம்பிக்கலாம் .... புதுச்சேரியில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டன, ==== நாரயாண சாமிய யும் பாராட்டலாம்.. நமக்கு எதிரி எடப்பாடி மட்டுமே .. கமால் ஹாசன் ஆரம்பிக்கலாம்..திட்ட / பாராட்ட
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X