பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் சாரல் மழை: குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதி களில், நேற்று காலை சாரல் மழை பெய்தது.தமிழகத்தில், காற்றின் திசை வேக மாறுப்பாட்டால் கடந்த, மூன்று நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த, 31ல், 26.18 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில், இரண்டு நாட்களாக மழை இல்லாத நிலையில், கரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல், பல்வேறு இடங்களில்,

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதி களில், நேற்று காலை சாரல் மழை பெய்தது.


தமிழகத்தில், காற்றின் திசை வேக மாறுப்பாட்டால் கடந்த, மூன்று நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த, 31ல், 26.18 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில், இரண்டு நாட்களாக மழை இல்லாத நிலையில், கரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல், பல்வேறு இடங்களில், சாரல் மழை பெய்தது. இதனால், குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை, 8:00 மணி வரை தோகைமலையில் மட்டும், 1 மி.மீ., மழை பதிவானது.


* க.பரமத்தி கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 32 கன அடியாக இருந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.58 அடியாக இருந்தது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆத்துப்பாளையம் அணை நாளை நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 821 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர் மட்டம், 89.51 அடியாக இருந்தது.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5,566 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிகளுக்கு, 4,846 கனஅடி காவிரியாற்றிலும், மூன்று கிளை வாய்க்காலில், 720 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X