கரூர்: பொங்கல் பண்டிகைக்காக, மண் பானைகள் விற்பனைக்கு, கரூர் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளன.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் வரும், 15 முதல், 17 வரை கொண்டாடப்படுகிறது. அப்போது, பாரம்பரியமாக பொங்கல் வைக்க, தமிழர்கள் மண் பானைகளை பயன்படுத்தி வருகின்றனர். பொது மக்கள், விவசாயிகளை தவிர பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், மாணவ, மாணவியர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். பல்வேறு அரசு துறை அலுவலகங்களிலும், ஊழியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடுவர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும், 10 நாட்கள் உள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் பசுபதிபாளையம் ஐந்து சாலை, பஞ்சமாதேவி, லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி, வேலாயுதம்பாளையம், புலியூர், வெள்ளியணை உள்ளிட்ட பல இடங்களில், மண் பானை தயாரிப்பு கடந்த, ஒரு மாதம் முன் துவங்கியது. தற்போது, விற்பனைக்கு தயாராக உள்ளது. பானைகளின் அளவை பொறுத்து, 150 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மண் அடுப்பு, 70 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை விற்பனைக்கு தயாராக உள்ளது. அதை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்ல துவங்கியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE