பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை என்னுடைய முதல் வேலை: ஸ்டாலின்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கரூர்: '' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து, மக்கள் முன் நிறுத்தி சட்டரீதியான தண்டனை வாங்கி கொடுப்பதுதான், என்னுடைய முதல் வேலை,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிபாளையத்தில், தி.மு.க., சார்பில், 'அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில், கிராம மக்கள் சபை கூட்டம்,

கரூர்: '' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து, மக்கள் முன் நிறுத்தி சட்டரீதியான தண்டனை வாங்கி கொடுப்பதுதான், என்னுடைய முதல் வேலை,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.


கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிபாளையத்தில், தி.மு.க., சார்பில், 'அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில், கிராம மக்கள் சபை கூட்டம், பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று நடந்தது. அதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளார். மகளிர் மாநாடு போல் உள்ளது. மாங்காய் பற்றி பேசுகிறார் என, பத்திரிக்கையாளர்கள் திரித்து எழுத கூடும். நான் பழமொழியைதான், அடையாளமாக சொன்னேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இறந்து ஐந்தாண்டுகள் ஆக போகிறது. பழனிசாமி நேரடியாக, முதல்வராக தேர்வு செய்யவில்லை. ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்பதற்காக தான், மக்கள் ஓட்டு போட்டார்கள். தி.மு.க., 1.1 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது. அதற்காக, கவலைப்படவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு, பன்னீர் செல்வம் முதல்வரானார். ஆனால், சசிகலா முதல்வராக விரும்பியதால், பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதிக்கு போய், தியானம் செய்து ஆவியுடன் பேசி பிரிந்தார். சசிகலா ஊழல் வழக்கில் சிறைக்கு செல்ல நேர்ந்ததால், பழனிசாமி அவரது காலில் விழுந்து முதல்வரானார். பிறகு, துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட, பன்னீர் செல்வமும், பழனிசாமியும் இணைந்தனர். ஜெயலலிதா மறைவு குறித்து விசாரிக்க, பன்னீர் செல்வம் கோரிக்கைபடி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், எட்டு முறை சம்மன் அனுப்பியும், பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை. இதுகுறித்து, பன்னீர் செல்வம் என் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து, மக்கள் முன் நிறுத்தி சட்டரீதியான தண்டனை வாங்கி கொடுப்பதுதான், என்னுடைய முதல் வேலை. அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற முடியாது. கிராமசபை கூட்டங்களை, அ.தி. மு.க., அரசு நடத்துவது இல்லை. இதனால் தான், தி.மு.க., நடத்துகிறது. கரூர் மாவட்டத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X