பஞ்., சமுதாய கூடத்தில் அடிப்படை வசதி தேவை

Added : ஜன 04, 2021
Share
Advertisement
குளித்தலை: பஞ்., சமுதாய கூடத்தில், அடிப்படை வசதிகள் இல்லாததால், பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குளித்தலை யூனியனில், 13, தோகைமலை யூனியனில், 20 என, மொத்தம், 33 பஞ்சாயத்துகள் உள்ளன. பஞ்., சமுதாய கூடங்களில், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த கட்டணத்தில், நடத்திக்கொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், அனைத்து பஞ்.,ல், உள்ள சமுதாய

குளித்தலை: பஞ்., சமுதாய கூடத்தில், அடிப்படை வசதிகள் இல்லாததால், பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குளித்தலை யூனியனில், 13, தோகைமலை யூனியனில், 20 என, மொத்தம், 33 பஞ்சாயத்துகள் உள்ளன. பஞ்., சமுதாய கூடங்களில், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த கட்டணத்தில், நடத்திக்கொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், அனைத்து பஞ்.,ல், உள்ள சமுதாய கூடங்களில் சுகாதார வசதி, குடிநீர் வசதி இல்லை. குறிப்பாக, குமாரமங்கலம், நல்லூர், வலையப்பட்டி பஞ்சாயத்து கட்டடம் சேதம் ஏற்பட்டும், மின் விசிறிகள் இல்லாமல் இருந்து வருகிறது. சில சமுதாய கூடங்களில், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. எனவே, பஞ்., சமுதாய கூடங்களில் அனைத்து வசதிகள் ஏற்படுத்தி தர, பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X