சென்னை : புயல் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதில், உச்சவரம்பு தளர்த்தப்பட்டு உள்ளதால், விவசாயிகள்உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், டிசம்பரில் வீசிய, 'நிவர் மற்றும் புரெவி' புயல் காரணமாக, 7.67 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால், ஐந்து லட்சம் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.பயிர்சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்றுள்ளனர். விரைவில், மத்திய அரசின் நிவாரணம் அறிவிக்கப்படலாம். இதனிடையே, பயிர் பாதித்த விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க, 600 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மானாவாரி மற்றும் நீர்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு, 2.5 ஏக்கருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த, 13 ஆயிரம் ரூபாய் நிவாரணம், தற்போது, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுபல்லாண்டு கால பயிர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 18 ஆயிரம் ரூபாய் நிவாரணம், 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.பயிர் பாதித்த விவசாயி களுக்கு அதிகபட்சமாக, 2.5 ஏக்கருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. இந்த உச்சவரம்பை தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதுக்கும், நிவாரணம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில், 2,500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.இதைத் தொடர்ந்து, 7ம்தேதி முதல் பயிர் பாதித்த விவசாயிகளுக்கு, அவர்களது வங்கி கணக்குகளில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இதனால், விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE