புவனகிரி : புதுச்சேரி பெண் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, மதகடிப்பட்டு, பி.எஸ்.பாளையத்தை சேர்ந்தவர் சத்யா,35; இவரது கணவர் ராஜேந்திரன் வெளிநாட்டில் உள்ளார்.கடலுார் மாவட்டம், புவனகிரியில் உள்ள தனியார் நிதி நிறுவன வளாகத்தில், கடந்த 1ம் தேதி, உடல் அழுகிய நிலையில் சத்யா, இறந்து கிடந்தார்.புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, சந்தேகத்தின் பேரில், நேற்று முன்தினம் ஆறு பேரை பிடித்து விசாரித்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த தரசூர் சக்திவிளாகம் எழிலரசன் மகன் முரசொலிமாறனை, நேற்று முன்தினம் போலீசார் வடலுாரில் மடக்கிப் பிடித்தனர்.அப்போது, முரசொலிமாறன் விஷம் குடித்ததாக தெரிவித்ததால், அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரிடம் விசாரித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE