விழுப்புரம் : ஆரோவில் அருகே உணவில் விஷம் வைத்து பறவைகளை கொன்ற வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கோட்டக்கரை - இடையஞ்சாவடி சாலையில் அரவிந்தர் ஆசிரமம் அமைந்துள்ளது. இதன் வாசலில் உள்ள ஆலமரத்தில் வாழும் கிளி, குயில், மைனா உள்ளிட்ட பல வகையான பறவைகள், கடந்த 28 ம் தேதி மர்மமான முறையில் கீழே விழுந்து இறந்தன.திண்டிவனம் உதவி வனக்காப்பாளர் இக்பால் தலைமையிலான வனச்சரகர்கள் இறந்த பறவைகளை பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், பறவைகள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக வனத் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர். ஆசிரமம் அருகே உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் உணவில் விஷம் கலந்து பறவைகளுக்கு வைத்தது தெரியவந்தது.
விசாரணையில், பறவைகளுக்கு விஷம் வைத்தவர், புதுச்சேரி லாஸ்பேட்டை, நரிக்குறவர் காலனியை சேர்ந்த பொன்மலை மகன் சிரஞ்சீவி,31; என தெரிந்தது. அவரை நேற்று வனச்சரகர்கள் பிடித்து விசாரித்ததில், பறவைகளுக்கு விஷம் வைத்து சாகடித்து, அதன் கறிகளை விற்பனை செய்தது தெரியவந்தது. சிரஞ்சீவியை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE