சீன கோடீஸ்வரர் ஜாக் மா 2 மாதங்களாக காணவில்லை

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
பீஜிங்: சீன கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா நிறுவனருமான ஜாக் மா, கடந்த இரண்டு மாதங்களாக வெளியில் தலைகாட்டவில்லை. அவர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.அலிபாபா நிறுவனர் ஜாக் மா, மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர், கடந்த அக்.,24ம் தேதி, சீன அரசு, தொழில் நிறுவனங்கள்
China, Billionaire, JackMa, Missing, Alibaba, சீனா, கோடீஸ்வரர், அலிபாபா, ஜாக்மா, காணவில்லை

பீஜிங்: சீன கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா நிறுவனருமான ஜாக் மா, கடந்த இரண்டு மாதங்களாக வெளியில் தலைகாட்டவில்லை. அவர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

அலிபாபா நிறுவனர் ஜாக் மா, மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர், கடந்த அக்.,24ம் தேதி, சீன அரசு, தொழில் நிறுவனங்கள் மீது விதித்துவரும் கட்டுப்பாடுகள் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், தொழில் நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் 'வயோதிகர்கள் மன்றம்' என்றும், காலத்திற்கு ஏற்ப இவர்கள் மாறவேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். இதனால் கோபமடைந்த சீன அரசு, அலிபாபா நிறுவனம் மீது அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.


latest tamil news


சில நாள்களுக்கு முன்பு, அலிபாபா நிறுவனம் போட்டியாளர்களுக்கு உரிய வாய்ப்பினைத் தராமல், நயவஞ்சமாக செயல்பட்டிருக்கிறது என்று புதிய விசாரணையைத் துவக்கியது. அலிபாபா நிறுவனத்தின் மீது சீன அரசு இப்படி தொடர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக ஜாக் மா, வெளியில் வராமலே இருக்கிறாராம்.

கடந்த நவ., இறுதியில் புதிய தொழில்முனைவோர்களைக் கண்டறியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர் குழுவில் ஜாக் மா இடம்பெற வேண்டிய நிலையில், அவருக்கு பதிலாக அலிபாபா நிறுவனத்தின் வேறொரு உயரதிகாரி இடம்பெற்றார். ஜாக் மாவுக்கு வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என அலிபாபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டு மாதங்களாக பொதுவெளியில் தலைக்காட்டாமல் காணாமல் போயுள்ள ஜாக் மா குறித்த உண்மைகளை சீன அரசு மறைப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
07-ஜன-202108:06:53 IST Report Abuse
தல புராணம் Jack Ma has pancreatic cancer or some sort of serious personal medical problem. ஆப்பிள் நிறுவனர் கூட சாவிற்கு முன் இரண்டு வருடம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஜன-202111:07:41 IST Report Abuse
Bhaskaran அந்தக்காலத்தில் கலைமகள் பத்திரிகையில் தலைநகரிலிருந்து என்னும் தலைப்பில் மாதாமாதம் ஸ்ரீனிவாசன் என்பவர் டெல்லியிலிருந்து அரசியல் கட்டுரை எழுதுவார் மிசா பற்றியும் இந்திராகாந்தியின் நடவடிக்கைகளைப்பற்றியும் கடுமையாகவிமர்சித்து எழுதினார் .அவர் மகன் காணாமல்பொய் பிணமாக மீட்கப்பட்டார் .Ella சர்வாதிகாரிகளும் ஒண்ணுதான் இதில் காங்கிரஸ் என்ன கம்ம்யூனிஸ்ட் என்ன
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
05-ஜன-202110:58:28 IST Report Abuse
Gandhi கம்யூனிஸ்ட்கள் போராடும் போது ஹீரோவாக தெரிவார்கள். பதவியை கைப்பற்றியதும் வில்லன்களாக மாறிவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X