புதுடில்லி : இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை நீண்டு வரும் நிலையில் இந்தியாவில் ரயில் சுரங்க பாதை தொடர்பான பணிக்கு சீன நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதை எதிர்த்து டுவிட்டரில் சீனாவை புறக்கணியுங்கள் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.
இந்தியா - சீனா இடையே ஒரு இணக்கமான சூழல் இல்லை. எல்லை பிரச்னை தொடர்பாக இரு நாடுகளுக்கும் எல்லையில் அவ்வப்போது சண்டை நடக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் கூட சீன வீரர்கள் அத்துமீறினர். இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இதில் இரு நாட்டு வீரர்கள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டன. அதன்பின் சீனா நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும், இரு நாட்டு இடையேயான வர்த்தகம் தொடர்பான விஷயங்களும் முன்பை விட குறைந்தன.
இந்நிலையில் 'தி நேஷனல் கேபிடல் ரீஜன் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன்' ஆர்ஆர்டிஎஸ் திட்டத்தின் கீழ், டில்லி - மீரட் இடையான ரயில் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதில் நியூ அஷோக் நகரிலிருந்து, சஹிபாபாத் வரையிலான 5.6 கி.மீ. சுரங்க ரயில்பாதை அமைக்கும் பணி சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எல்லை விவகாரத்தை காரணம் சீன அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளையும், எதிர்ப்புகளையும் காட்டி வரும் மத்திய அரசு, இந்த ரயில்வே பணியை சீன நிறுவனத்திடம் வழங்கி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த பணியை சீன நிறுவனத்திற்கு வழங்க கூடாது என்ற குரல்கள் சமூகவலைதளமான டுவிட்டரில் ஒலிக்க தொடங்கி உள்ளது. பலரும் #BoycottChina என்ற ஹேஷ்டாக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்கின்றனர்.
டில்லி - மீரட் இடையே ரயில் பாதை திட்ட பணியை சீன நிறுவனத்திற்கு வழங்கியது ஏற்படையது அல்ல. சீனா எதிர்ப்பு இயக்கத்தின் தேசிய உணர்வுகளுக்கு இது மிகவும் மோசமான எடுத்துக்காட்டு. சீன ஆப்களை தடை செய்தனர், சீன பொருட்களை தடைய செய்வோம் என மக்கள் மனதில் விதைத்தனர். ஆனால் இப்போது ரயில் பணியை சீன நிறுவனத்திற்கு வழங்கி உள்ளனர். சீன பொருட்களை புறக்கணிப்போம், மேக்கின் இந்தியாவை உருவாக்குவோம் என சொன்னது என்னாச்சு. இது போன்ற கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது வேடிக்கையான விஷயம் பா.ஜ.வின் பக்தர்களாக இருப்பவர்கள் கூட #BoycottChina என்பது எதற்காக என்பது புரியாமல் டிரெண்ட் செய்கின்றனர் என சில கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே, ''ஒப்பந்த ஏலத்தில் பல நிறுவனங்கள் கலந்து கொண்டன. அனைத்து விதிமுறைகளின்படியே ஒப்பந்த பணி வழங்கப்பட்டது. திட்டமிட்ட காலத்திற்குள் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என என்சிஆர்டிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE