பேஸ்புக்கில் இக்னோர் செய்தவருக்கு கொலை மிரட்டல்; இன்றைய 'கிரைம் ரவுண்ட்அப்'

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
* மிரட்டி பணம் பறித்த வழக்கில் மும்பை தாதா சோட்டாராஜன் உள்ளிட்ட 3 பேருக்கு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.* தெற்கு டில்லியின் சத்ரபூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிரக் என்பவர் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். அருகில் மனைவி ரேணுகா மயக்கமுற்ற நிலையில் கிடந்தார். இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.* ஜார்கண்ட்

* மிரட்டி பணம் பறித்த வழக்கில் மும்பை தாதா சோட்டாராஜன் உள்ளிட்ட 3 பேருக்கு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.


latest tamil news



* தெற்கு டில்லியின் சத்ரபூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிரக் என்பவர் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். அருகில் மனைவி ரேணுகா மயக்கமுற்ற நிலையில் கிடந்தார். இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

* ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஜெட்பூரில் மொபைல் போன் திருடர்கள் 2 பேர் கைது. இவர்களிடம் இருந்து 62 மொபைல் போன்கள் பறிமுதல்.


தமிழகத்தின் நிகழ்வு !


* கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னேற்ற கழகம் அமைப்பின் மாநில அமைப்பாளர் மணிகண்டன் என்பவரின் மனைவி லோகநாயகி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி. மணிகண்டன் மீது காவல் துறையினர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பொய் வழக்கு பதிந்து இருப்பதாக புகார்.


உலக நடப்பு !




latest tamil news


* அமெரிக்காவின் டகோடா என்ற பகுதியை சேர்ந்தவர் கலீப் பர்க்சீக். 27. இவர் பணியாற்றிய நிறுவனத்தின் முதலாளி வில்லிஸ்டனுக்கு பேஸ்புக் ரெக்யூஸ்ட் அனுப்பினார். ஆனால் அதனை அவர் இக்னோர் செய்து விட்டார். இதனால் ஆத்திரமுற்ற கலீப், முதலாளிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். இதில்: "என்னுடைய வேண்டுதலை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையேல் நான் உங்களை கொலை செய்வேன்" என எச்சரித்தார். இதனையடுத்து முதலாளி அளித்த புகாரில் அந்நபரை கைது செய்தனர்.

* நைஜீரியாவின் மானோவாஜி என்ற பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் 50 க்கும் மேற்பட்ட போக்கோஹாரம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் துப்பாக்கி முனையில் சுரங்க தொழிலாளர்கள் 11 பேரை கடத்தி சென்று சுட்டு கொன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கொலையான தொழிலாளர்கள் அப்பாவிகள் என்றும் கொலைக்கான காரணம் குறித்து விவசாரித்து வருவதாகவும் போலீசார் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-ஜன-202116:08:43 IST Report Abuse
வெகுளி வேலை கொடுத்து உதவியவரிடமே புத்தியை காட்டிட்டான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X