புதிய வேளாண் சட்டங்கள் நல்ல தீர்வு எட்டப்படுமா?

Added : ஜன 04, 2021
Share
Advertisement
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, சில நாட்களாக, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், இதில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சில், ஓரிரு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல், விவசாய

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, சில நாட்களாக, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், இதில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சில், ஓரிரு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்தல் போன்றவற்றில், தீர்வு எட்டப்படவில்லை. அதனால், இன்று மீண்டும் மத்திய அரசு பேச்சு நடத்துகிறது. மத்திய அரசோ, மாநில அரசுகளோ புதிதாக எந்த ஒரு சீர்திருத்தம் கொண்டு வந்தாலும், சட்டம் இயற்றினாலும், அதை எதிர்ப்பது எதிர்க்கட்சிகளின் வழக்கம்.

சீர்திருத்தங்களால் ஏற்படும் நன்மை, தீமைகளை உணரும் முன்னரே, அவற்றின் பாதிப்புகளை முழுமையாக அறியும் முன்பே, போராட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன. விவசாயம் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களான, தெலுங்கானா, ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்துள்ளன. இதனால், தங்களின் விளைபொருட்களை, எங்கு வேண்டுமானாலும் விற்க முடியும்; நல்ல விலை பெற முடியும் என, அந்த மாநிலங்களின் பெரும்பாலான விவசாயிகள் நம்புகின்றனர். அதேபோல, பொருளாதார நிபுணர்கள் பலரும், புதிய சட்டங்களை வரவேற்றுள்ளனர்.

ஆனால், பஞ்சாப் மாநில விவசாயிகள் தான் இச்சட்டங்களை தீவிரமாக எதிர்க்கின்றனர். இதற்கு காங்கிரஸ் உட்பட, பா.ஜ.,வுக்கு எதிரான, சில கட்சிகளின் துாண்டுதலும் காரணம். 'விவசாயிகள் மாநிலம் விட்டு மாநிலம் உட்பட, எங்கு வேண்டுமானாலும், தங்களின் விளைபொருட்களை கொண்டு சென்று, நல்ல விலைக்கு விற்று ஆதாயம் பெற வேண்டும். எனவே, தடையில்லாத சந்தைகளை உருவாக்க வேண்டியது அவசியம்' என, காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக, ௨௦௧௩ல் நியமிக்கப்பட்ட கமிட்டியும், விவசாய விளைபொருட்களுக்கு தடையில்லா சந்தைகளை உருவாக்க, சட்ட மசோதா ஒன்றை உருவாக்க வேண்டும் என, பரிந்துரைத்தது. கடந்த, ௨௦௧௯ல் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், விவசாய விளைபொருட்கள் மார்க்கெட்டிங் கமிட்டி சட்டம் ரத்து செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அதனால், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு என்ன செய்ய நினைத்ததோ, அதையே தற்போது, மோடி அரசு செய்துள்ளது. இருந்தும், அதை ஏற்க மறுத்து, விவசாயிகளை துாண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றன எதிர்க்கட்சிகள். பயிர் காப்பீடு, குறைந்த வட்டியில் விவசாய கடன், உர மானியம் என, விவசாயிகளுக்கு ஆதரவாக, பல நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு, அதன் பலனை விவசாயிகள் தற்போது பெற்று வருகின்றனர்.

அதுபோல, இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, பொருட்களை நியாயமான விலைக்கு விவசாயிகள் விற்பதற்காகவே, புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன், குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதும் தொடரும் என, மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டும், அதை ஏற்காமல் போராட்டத்தை தொடர்வது சரியானதல்ல. கடந்த, ௧௯௯௦ம் ஆண்டுகளில், காங்., சார்பில், பிரதமராக இருந்த நரசிம்மராவ், பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அதன் வாயிலாக, அவருக்கு முன்பிருந்த பிரதமர்கள் பின்பற்றிய சோசலிச கொள்கைகளில் இருந்து விலகி, தனியார்மயமாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. அப்போதும், பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பின், சீர்திருத்தங்களின் பலனை பெற்ற பின், நாட்டில் வறுமையை குறைக்கவும், உள்ளார்ந்த வளர்ச்சியை அதிகரிக்கவும், தாராளமயமாக்கமும், சுதந்திரமான சந்தைகளும் அவசியம் என்பதை, நாட்டு மக்கள் உணர்ந்தனர். அதுபோல, விவசாயிகள் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றின் பலன் என்ன என்பது தெரிவதற்கு முன்னரே, அதை முடக்க முயற்சிப்பது சரியல்ல

மேலும், புதிய சட்டங்களானது, விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் விஷயத்தில், ஒரு போட்டி சூழ்நிலையை உருவாக்கும் என்பதோடு, சில உற்பத்தி பொருட்களுக்காக அன்னிய நாடுகளை, நம் நாடு சார்ந்திருப்பதும் தவிர்க்கப்படும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் மட்டுமின்றி, தற்போதைய ஆட்சி காலத்திலும், மக்களின் நன்மைக்காக, பல சமூக, பொருளாதார திட்டங்களை அமல்படுத்தியுள்ள மோடி அரசு, விவசாயிகளை மட்டும் தவிக்க விட்டு விடுமா என்ன? இதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உணர்ந்தால் சரி. இன்றைய பேச்சில் நல்ல தீர்வு எட்டும் என, நம்புவோமாக.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X