பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 10,647

Added : ஜன 04, 2021
Share
Advertisement
மதுரை:திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 10,647 பேர் குணமாகியுள்ளனர்.மதுரைமதுரை மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 19,976 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 19 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,592 ஆகும். இதுவரை 453 பேர் இறந்துள்ளனர். தற்போது 163 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று

மதுரை:திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 10,647 பேர் குணமாகியுள்ளனர்.


மதுரை

மதுரை மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 19,976 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 19 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,592 ஆகும். இதுவரை 453 பேர் இறந்துள்ளனர். தற்போது 163 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.


திண்டுக்கல்


திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவில் இருந்து 16 பேர் மீண்டதால் குணமானோர் எண்ணிக்கை 10,647 ஆக உயர்ந்தது. நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 10,989 ஆக அதிகரித்தது. இன்னும் 145 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.


தேனி


தேனி மாவட்டடத்தில் நேற்று 3 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 16,642 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக 8 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,922 ஆக உயர்ந்தது. மொத்த பலி 323.


ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டார். 6 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியானது. இதுவரை 6334 பேர் பாதிக்கப்பட்டதில் 6128 பேர் குணமடைந்துள்ளனர். 32 பேர் சிகிச்சையில் உள்ளனர். 134 பேர் பலியாகினர்.


சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 3 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் புதிதாக 3 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 6546 பேர் பாதிக்கப்பட்டதில் 6362 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 58 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 126 பேர் பலியாகியுள்ளனர்.


விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 11 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 21 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை பாதிக்கப்பட்ட 16,385 பேரில் 16,049 பேர் குணமடைந்துள்ளனர். 107 பேர் சிகிச்சையில் உள்ளனர். 229 பேர் பலியாகியுள்ளனர்.


திருநெல்வேலி


திருநெல்வேலியில் நேற்று 22 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 15007 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 14 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 15,328 ஆனது. தற்போது 110 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 211 பேர் இறந்துள்ளனர்.


தென்காசி


தென்காசியில் நேற்று ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மொத்தம் 8071 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 8 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 8285 ஆனது. தற்போது 56 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 158 பேர் இறந்துள்ளனர்


துாத்துக்குடி


துாத்துக்குடியில் நேற்று 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 15873 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிப்பு 16,101 ஆனது. தற்போது 87 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X