பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 04, 2021
Share
Advertisement
ஜன., 5, 1975தஞ்சை மாவட்டம், கண்டியூரில், 1905 அக்., 23ம் தேதி பிறந்தவர், அ.சீனிவாச ராகவன். திருச்சி புனித ஜோசப், பாளையங்கோட்டை புனித சேவியர், நெல்லை ஹிந்து, சென்னை விவேகானந்தா கல்லுாரிகளில், ஆங்கிலத் துறை விரிவுரையாளர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின், துாத்துக்குடி வ.உ.சி., கல்லுாரி முதல்வராகவும் பணியாற்றினார். 'சிந்தனை' மாத இதழின் ஆசிரியராகவும்,


இதே நாளில் அன்று


ஜன., 5, 1975



தஞ்சை மாவட்டம், கண்டியூரில், 1905 அக்., 23ம் தேதி பிறந்தவர், அ.சீனிவாச ராகவன். திருச்சி புனித ஜோசப், பாளையங்கோட்டை புனித சேவியர், நெல்லை ஹிந்து, சென்னை விவேகானந்தா கல்லுாரிகளில், ஆங்கிலத் துறை விரிவுரையாளர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின், துாத்துக்குடி வ.உ.சி., கல்லுாரி முதல்வராகவும் பணியாற்றினார். 'சிந்தனை' மாத இதழின் ஆசிரியராகவும், 'திரிவேணி' என்னும் ஆங்கிலப் பத்திரிகைக்கு உதவியாசிரியராகவும் இருந்தார்.மார்கழி முப்பது நாளும், வானொலியில் அவரின் திருப்பாவை, திருவெம்பாவை சொற்பொழிவுகள், பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டன. இவர் எழுதிய, 'வெள்ளைப்பறவை' கவிதை நுாலுக்கு, 1968ல், 'சாகித்ய அகாடமி' பரிசு கிடைத்தது. தமிழ்க் கவிதைக்கு அளிக்கப்பட்ட, முதல் சாகித்ய அகாடமி பரிசு அது தான். 1975 ஜன., 5ம் தேதி, தன், 69வது வயதில் இயற்கை எய்தினார்.எழுத்தாளர் அ.சீ.ரா., காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X