பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டத்தில் தீர்வு இல்லை: 8ல் தொடர்கிறது அடுத்த கட்ட பேச்சு

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (26+ 10)
Share
Advertisement
புதுடில்லி :விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, நேற்று நடத்தப்பட்ட ஏழாம் சுற்று பேச்சிலும், சுமுக தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, 'அடுத்த சுற்று பேச்சு, வரும், 8ல் நடக்கும்' என, விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.மத்திய அரசு, மூன்று புதிய வேளாண் சட்டங்களை, கடந்த ஆண்டு அமல்படுத்தியது. 'இந்த சட்டங்களால், விவசாயமும், விவசாயிகளும், கடுமையாக
விவசாயிகள் ,போராட்டம், தீர்வு, பிடிவாதம்,அடுத்த கட்ட பேச்சு

புதுடில்லி :விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, நேற்று நடத்தப்பட்ட ஏழாம் சுற்று பேச்சிலும், சுமுக தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, 'அடுத்த சுற்று பேச்சு, வரும், 8ல் நடக்கும்' என, விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

மத்திய அரசு, மூன்று புதிய வேளாண் சட்டங்களை, கடந்த ஆண்டு அமல்படுத்தியது. 'இந்த சட்டங்களால், விவசாயமும், விவசாயிகளும், கடுமையாக பாதிக்கப்படுவர்' என கூறி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டில்லியின் கடும் குளிர் மற்றும் மழையில், ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு, ஆறு சுற்று பேச்சு நடத்தியது.கடந்த மாதம், 30ல், ஆறாம் சுற்று பேச்சு நடந்தது. இதில், அறுவடைக்கு பிந்தைய, விவசாய கழிவுகளை எரிப்பவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்வதை ரத்து செய்வது மற்றும் இலவச மின்சாரம் வழங்குவதை தொடர்வது ஆகிய இரண்டு விவகாரங்களில், சுமுக தீர்வு எட்டப்பட்டது.ஆனாலும், புதிய சட்டங்களை திரும்பப் பெற, விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியதை அடுத்து, பேச்சு தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், ஏழாம் சுற்று பேச்சு, டில்லி விஞ்ஞான் பவனில், நேற்று நடந்தது. இதில், 41 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அரசு தரப்பில், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவுத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், பஞ்சாபை சேர்ந்தச் எம்.பி.,யும், மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சருமான சோம் பர்காஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு, கூட்டத்தின் துவக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை, விவசாய சங்க பிரதிநிதிகள், மீண்டும் மீண்டும் முன் வைத்தனர். இதனால், கூட்டம் துவங்கிய ஒரு மணி நேரத்தில், இருதரப்பினரும் உணவு இடைவேளை எடுத்து, தனித்தனியாக விவாதித்தனர்.விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு, போராட்ட களத்தில் இருந்து உணவு எடுத்து வந்து பரிமாறப்பட்டது. கடந்த முறை, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், மதிய உணவு உட்கொண்ட மத்திய அமைச்சர்கள், இம்முறை, தனியாக உணவு அருந்தினர்.அப்போது, கடுமையான விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதன் பின், மாலை, 5:15 மணிக்கு, தொடர்ந்து நடந்த பேச்சில், சுமுக தீர்வு எட்டப்படாமலேயே கூட்டம் முடிவடைந்தது. இதையடுத்து, எட்டாம் சுற்று பேச்சை, 8ம் தேதி தொடர, இருதரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கை குறித்து, தங்களுக்குள் விரிவாக விவாதித்த பின், அடுத்த கட்ட பேச்சுக்கு வருவதாக, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதாக, விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், விவசாய சங்கத்தினரின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, இன்று விவாதிக்க உள்ளதாக, சங்க பிரதிநிதிகள் தகவல் தெரிவித்தனர்.

கூட்டம் குறித்து, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டம் சுமுகமான முறையில் நடந்தது. மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில், விவசாய சங்க பிரதிநிதிகள் பிடிவாதமாக இருந்ததால், சுமுக தீர்வு எட்டப்படவில்லை.மூன்று சட்டங்களில், எந்தெந்த பிரிவுகளில் தங்களுக்கு பிரச்னை உள்ளது என்பதை தனித்தனியாக குறிப்பிட்டால், அது குறித்து விரிவாக விவாதிக்க, மத்திய அரசு தயாராக உள்ளது. அடுத்த கூட்டத்திலாவது, சுமுக தீர்வு எட்டப்படும் என நம்புகிறோம். இரண்டு தரப்பினரும் முயற்சி எடுத்தால் மட்டுமே, சுமுக தீர்வு காண முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.




பிரமாண்ட திரை, ஒலிபெருக்கி



டில்லி சிங்கூ எல்லையில் உள்ள போராட்ட களத்தில், விவசாயிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'இதன் காரணமாக, போராட்ட மேடையில், பலர் பேசுவதை பார்க்கவும், முக்கிய அறிவிப்புகளை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை' என, விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்ட மேடை அருகே, 8 அடிக்கு, 10 அடி அளவில், இரண்டு பிரமாண்ட, எல்.இ.டி., திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 10 கி.மீ., துாரத்திற்கு, ஆங்காங்கே, பிரமாண்ட ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கூ எல்லையில், 'மொபைல் போன் சிக்னல்' சரிவர இல்லாததால், தகவல் தொடர்பில் விவசாயிகள் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இதை சமாளிக்க, 3 - 4 கி.மீ., துாரத்திற்கு பயன்படுத்தும், 'வாக்கி டாக்கி' எனப்படும், தகவல் தொடர்பு சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன.


'ரிலையன்ஸ்' நிறுவனம் விளக்கம்



தொழிலதிபர் முகேஷ் அம்பானியின், 'ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:மத்திய அரசு அமல்படுத்தி உள்ள, மூன்று புதிய வேளாண் சட்டங்களால், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துக்கு எந்தவிதமான பலனும் கிடையாது. எங்கள் நிறுவனம், ஒப்பந்த விவசாய தொழிலில் இதுவரை ஈடுபட்டது இல்லை. இனியும் ஈடுபடும் எண்ணமில்லை.பஞ்சாப், ஹரியானா உட்பட, நாட்டின் பிற பகுதிகளில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாய நிலங்களை, எங்கள் நிறுவனம் விலைக்கு வாங்கவில்லை.

எங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான, பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும், நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுவதில்லை. எங்கள் நிறுவனம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், 1,500க்கும் மேற்பட்ட, 'ரிலையன்ஸ் மொபைல்' கோபுரங்கள், தொழில் விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மொபைல் கோபுரங்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க, மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில், 'ரிலையன்ஸ்' நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜன-202108:47:15 IST Report Abuse
Rajan மூர்க்கன் ஹிந்துக்கள் பெயரில் திரிவது ஏன்?
Rate this:
Cancel
Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜன-202122:36:29 IST Report Abuse
Rajan Just shoot these bisrards
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
05-ஜன-202121:52:18 IST Report Abuse
வெகுளி சுமூக தீர்வு காணும் எண்ணமில்லாத கலவரக்காரர்களிடம் அரசு பேசி பயனில்லை.... அவர்கள் குளிரில்லா அரங்கில் தங்க ஏற்பாடு செய்யுங்கள்.... அவர்களாக விரும்பிய போது அல்லது மீடியா வெளிச்சம் குறையும் போது அவர்களாகவே வீடு செல்லட்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X