சென்னை : சொத்து விற்பனை பதிவுக்கான முத்திரை தீர்வையை, ௫ சதவீதம் குறைப்பது குறித்த அறிவிப்பு, முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா பரவல் காரணமாக, ௨௦௨௦ மார்ச் மாதம், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், வீடு விற்பனை உள்ளிட்ட, சொத்து பரிமாற்றங்கள் முற்றிலுமாக முடங்கின. தற்போது, ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தாலும், சொத்து பரிமாற்றத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், சொத்து விற்பனை முத்திரை தீர்வையில், ௫ சதவீதத்தை தற்காலிகமாக குறைக்க வேண்டும் என, 'கிரெடாய்' உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தின.
இது குறித்து, பதிவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:கிரெடாய் அமைப்பினர், துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடம் அளித்த கோரிக்கை குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. இதை நிறைவேற்றுவது குறித்து, நிதித் துறை கூடுதல் தலைமை செயலர், வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலர்கள் நிலையில் ஆலோசிக்கப்பட்டது.இது தொடர்பான அறிக்கை, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு அனுப்பப் பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE