சென்னை : கொரோனா பீதி படிப்படியாக ஓய்ந்து வரும் நிலையில், நாட்டின் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தெரிய வந்துள்ளதால், அனைத்து மாநில வனத் துறையினரும் உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமாச்சல பிரதேசத்தில், சில பகுதிகளில் ஏராளமான வலசை பறவைகள், கொத்து கொத்தாக இறந்தன. தடுப்பு பணிஇது குறித்து ஆய்வு செய்ததில், பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்து உள்ளது. இது குறித்து, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள அவசர கடிதம்: ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளில் இருந்து வலசை பறவைகள், அக்., முதல் மார்ச் வரை, இந்தியாவுக்கு அதிக அளவில் வருவது வழக்கம். ஹிமாச்சல பிரதேச சம்பவத்தை அடுத்து, பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை முடுக்கி விட, மாநில அரசுகள் உஷார் படுத்தப்படுகின்றன.
பறவை காய்ச்சல் தடுப்பு தொடர்பாக, 2015ல் கால்நடை மருத்துவ துறை பரிந்துரைத்த செயல் திட்டத்தின் படி, இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பறவைகளின் எச்சம், கண் மற்றும் மூக்கில் ஏற்படும் கசிவுகள் வாயிலாக, மனிதர்களுக்கு நோய் பரவும்.பறவைகள் சரணாலயங்கள், உயிரியல் பூங்காக்கள், பண்ணைகள் ஆகியவற்றில் நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயிருடனோ, இறந்த நிலையிலோ பறவைகளை கையாள்வோர், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நடவடிக்கை தீவிரம்மேலும், பறவைகள் அதிகமாக இறந்தால், அது குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மத்திய அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, தமிழகத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை, தீவிரப்படுத்துவதற்கான பணிகளை, வனத் துறை துவக்கி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE