சென்னை: டெல்டா மாவட்டங்களில், 13 லட்சம் ஏக்கரில், சம்பா பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. இவை, அறுவடைக்கு தயாராகி வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு பின், அறுவடை களைகட்ட வாய்ப்புள்ளது.ஏற்கனவே, 'நிவர், புரெவி' புயல் காரணமாக, இம்மாவட்டங்களில், நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று முதல் பல இடங்களில், மழை துவங்கி விட்டது.அறுவடை நேரத்தில் மழை மிரட்டுவதால், மூன்று மாத உழைப்பு வீணாகுமா என்ற கவலையில், விவசாயிகள் உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி குறைந்தால், அரசின் உணவு தானிய இலக்கை பூர்த்தி செய்வதில் பிரச்னை ஏற்படும். இதனால், வேளாண் துறையினரும் கவலையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE