பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் புதிய ரயில் பால பணி

Added : ஜன 04, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே, பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி, 79 நாட்களுக்கு பின் மீண்டும் துவங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் பாலம், நுாற்றாண்டு பழமையானது. நடுவில் உள்ள துாக்கு பாலம் பலவீனமானதால், 250 கோடி ரூபாயில், புதிய பாலம் அமைக்க, 2019 மார்ச், 1ல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நவ., 8ல், கட்டுமான பணி துவங்கியது.கொரோனா ஊரடங்கால், நான்கு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே, பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி, 79 நாட்களுக்கு பின் மீண்டும் துவங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் பாலம், நுாற்றாண்டு பழமையானது. நடுவில் உள்ள துாக்கு பாலம் பலவீனமானதால், 250 கோடி ரூபாயில், புதிய பாலம் அமைக்க, 2019 மார்ச், 1ல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நவ., 8ல், கட்டுமான பணி துவங்கியது.கொரோனா ஊரடங்கால், நான்கு மாதங்கள் கட்டுமான பணி நிறுத்தப்பட்டு, ஆகஸ்டில் மீண்டும் பணியை துவக்கினர். வடகிழக்கு பருவ மழையால், அக்., 15 முதல் மீண்டும் பணியை நிறுத்தினர்.

பாம்பனில் சூறாவளி, கடல் கொந்தளிப்பால், கடலில் நிறுத்தி இருந்த இரும்பு மிதவை படகுகள், தற்போதைய ரயில் பாலம் மீது மோதி, துாணை சேதப்படுத்தின.இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, காற்றின் வேகம் தணிந்து, மணிக்கு, 25 - 30 கி.மீ., வேகத்தில் வீசுகிறது. இதனால், 79 நாட்களுக்கு பின், கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கின. 'திட்டமிட்டபடி, 2022க்குள் புதிய பால பணிகள் நிறைவடைய வாய்ப்பு இல்லை. மேலும் ஓராண்டு நீடிக்கும்' என, ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X