மொடக்குறிச்சி : கொடுமுடி அருகே, பொங்கல் பரிசு வழங்கும் விழாவில், தி.மு.க., -- அ.தி.மு.க., நிர்வாகிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சேர்களை வீசினர்.
இதில், எஸ்.ஐ., காயமடைந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி யூனியன், பாசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 1,300 பயனாளிகளுக்கு, பொங்கல் இலவச தொகுப்பு, 2,500 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை வழங்க, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, நிர்வாகிகளுடன் பாசூர் வந்தார்.எம்.எல்.ஏ., வருகையை ஒட்டி, கட்சிக்கொடி கட்டி, மைக் செட் அமைத்தனர். இதை பார்த்த, தி.மு.க.,வினரும், தங்கள் கட்சி கொடிகளை கட்டினர். எம்.எல்.ஏ., பொங்கல் தொகுப்பு வழங்கும்போது, எம்.ஜி.ஆர்., பாடல் ஒலிபரப்பானது.இதை நிறுத்தும்படி அங்கிருந்த, தி.மு.க., வினர் கூறினர்.
இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எம்.எல்.ஏ., முன்னிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் சேர்களை வீசினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் தடுத்தனர்.இதில், எஸ்.ஐ., வரதராஜனுக்கு மூக்கில் லேசான காயம் ஏற்பட்டது. போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இது தொடர்பாக, பாசூர் தொடக்க கூட்டுறவு வங்கி இயக்குனர் கோபால்ராசு உட்பட ஐந்து தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE