திருவாரூர் : ''பச்சை துண்டு போட்டால் விவசாயி என, முதல்வர் இ.பி.எஸ்., நினைக்கிறார். அவர், பச்சை துரோகி. விவசாயிகளை கேவலப்படுத்துகிறார்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, அவளிவநல்லுாரில் தி.மு.க., சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. பச்சை துண்டுகட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: ஆண்கள் வெற்றிக்கு பின், பெண்கள் உள்ளனர். பெண்கள் வாழ்க்கையில், பல முன்னேற்றங்களை பார்க்கிறேன். பெண்கள் முன்னேற்றத்திற்கு, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, பல திட்டங்களை கொண்டு வந்தார்.பச்சை துண்டு போட்டால் விவசாயி என, முதல்வர் இ.பி.எஸ்., நினைக்கிறார். அவர், பச்சை துரோகி. விவசாயிகளை கேவலப் படுத்துகிறார்.
டில்லியில் போராடும் விவசாயிகளை பற்றி, மத்திய அரசு கவலைபடவில்லை. மத்திய அரசுக்கு, அடிமை சேவகனாக, முதல்வர் உள்ளார். தி.மு.க., ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழு துவங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மகளிர் குழுக்களை கண்காணிக்க, தனி குழு அமைக்கப்படும்.பயன் இல்லைதிருவாரூர் மாவட்டத்தில், பினாமிகளை கொண்டு, மணல் குவாரிகள் அமைத்து, மணல் கொள்ளை நடக்கிறது. இதற்காக தனியாக பாலம் கட்டியுள்ளனர். இந்த பாலத்தால், மக்களுக்கு பயன் இல்லை. மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE