அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்தாண்டு ரூ.5,000 துணை சபாநாயகர் அதிரடி

Added : ஜன 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : ''அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், அடுத்த ஆண்டு, பொங்கலுக்கு, 5,000 ரூபாய் வழங்கப்படும்,'' என, துணை சபாநாயகர் ஜெயராமன் பேசினார். திருப்பூரில், நேற்று ரேஷன் கார்டுதாரருக்கு, 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கி, அவர் பேசியதாவது:எம்.ஜி.ஆர்., ஆட்சியில் பொங்கலுக்கு, இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஜெயலலிதா ஆட்சியில் வேஷ்டி, சேலையுடன் பொங்கலிட அரிசி, வெல்லம்,

திருப்பூர் : ''அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், அடுத்த ஆண்டு, பொங்கலுக்கு, 5,000 ரூபாய் வழங்கப்படும்,'' என, துணை சபாநாயகர் ஜெயராமன் பேசினார்.

திருப்பூரில், நேற்று ரேஷன் கார்டுதாரருக்கு, 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கி, அவர் பேசியதாவது:எம்.ஜி.ஆர்., ஆட்சியில் பொங்கலுக்கு, இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஜெயலலிதா ஆட்சியில் வேஷ்டி, சேலையுடன் பொங்கலிட அரிசி, வெல்லம், கரும்பு போன்றவற்றுடன், 100 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.தற்போது, பொங்கல் தொகுப்புடன், 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது. தாய், 8 அடி பாய்ந்தால், குட்டி, 16 அடி பாயும் என்பது போல், பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஆட்சி தொடர்ந்தால், பொங்கலுக்கு, 5,000 ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X