சென்னை : பொங்கல் சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்து, இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகை, வரும், 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள்; அண்டை மாநிலங்களில் இருந்து, ஏராளமானோர் சொந்த ஊர் செல்வது வழக்கம்.இதற்காக, அரசு பஸ்களுக்கான முன்பதிவு, டிசம்பரில் துவங்கியது. இதுவரை, 10 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு இதே கால கட்டத்தில், 50 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்திருந்தனர். ஏற்கனவே, கொரோனா பரவலால், ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்டவற்றுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில், பெரும்பாலானவற்றில், 50 சதவீத இருக்கைகளே நிரம்பின.
இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்காக, எத்தனை பஸ்களை, எந்தெந்த நகரங்களில் இருந்து இயக்குவது என்பது குறித்து, தலைமைச் செயலகத்தில், போக்குவரத்து துறை செயலர் தலைமையில், இன்று ஆலோசனை நடக்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவை, போக்குவரத்து துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE