கோவை:கோவை-கொல்கத்தா இடையே வரும், 14ம் தேதி முதல் நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளது.கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சென்னை, டில்லி உள்பட பல்வேறு உள்நாட்டு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் கோவையில் இருந்து கொல்கத்தா செல்ல நேரடி விமான சேவை இல்லை. கோவையில் இருந்து வேறு நகரங்களுக்கு சென்று, அங்கிருந்து கொல்கத்தா செல்ல வேண்டும்.இச்சூழலில் இண்டிகோ விமானம் வரும், 14ம் தேதி முதல் பொங்கல் ஸ்பெஷலாக கோவை-கொல்கத்தா இடையே, நேரடி விமான சேவையை துவங்குகிறது.இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன், கோவை-மும்பை இடையே நேரடி விமான சேவை துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE