பொது செய்தி

தமிழ்நாடு

இலவச ஜே.இ.இ., பயிற்சி; 712 மாணவர்கள் பங்கேற்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கோவை:அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான, இலவச ஜே.இ.இ., பயிற்சியில், 712 மாணவர்கள் பங்கேற்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய அரசின் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஆகியவற்றில், சேர நடத்தப்படும், ஜே.இ.இ., தேர்வுக்கு, நேற்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.இதில், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில், வகுப்புகள்

கோவை:அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான, இலவச ஜே.இ.இ., பயிற்சியில், 712 மாணவர்கள் பங்கேற்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய அரசின் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஆகியவற்றில், சேர நடத்தப்படும், ஜே.இ.இ., தேர்வுக்கு, நேற்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.இதில், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில், வகுப்புகள் கையாள்வதோடு, தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரு ஆண்டுகள் வழங்கப்படும் இப்பயிற்சியில், பிளஸ் 2 மாணவர்கள் தற்போது சேர்ந்திருப்பதால், அவர்களுக்கு மாதிரி தேர்வுகள் மூலம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 712 பேர் இவ்வகுப்பில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். மாணவர்களுக்கு பிரத்யேக, பயனர் எண், பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வகுப்பில் மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு, அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X