கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தற்காலிக பேராசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியதைத்தொடர்ந்து, பல்கலையில் பணிபுரியும் அமைப்பு பணியாளர்களும் போராட்டத்தில் இறங்க திட்டமிட்டுள்ளனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 60 துறைகள் உள்ளன. தமிழகம் முழுக்க பல்கலைக்கு, 60 கல்லுாரிகள் உள்ளன. இதில் அமைச்சுப்பணியாளர்களாக, 580 பேர் பணிபுரிந்து வந்தனர்.
தற்போது அதில், 140 பணியிடம் காலியாக உள்ளது.இது வரை, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பணிவிபரம் குறித்த ஒரு பக்கஅறிக்கையை (பர்பார்மன்ஸ் ரிப்போர்ட்), பல்கலை நிர்வாகம் கேட்கிறது.இதற்கு, அமைச்சுப் பணியாளர்கள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு பல்கலை கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம்குறித்தும், சட்டரீதியாக இப்பிரச்னையை சந்திப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஏற்கனவே தற்காலிக பேராசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.வேளாண் பல்கலை அமைச்சுப்பணியாளர்கள் கூறுகையில், 'நாங்கள் இப்பல்கலையில் பணியில் சேர்ந்த பின், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய துறைரீதியான மூன்று தேர்வுகளில், வெற்றி பெற்று பதவி உயர்வு பெற்று வருகிறோம். இச்சூழலில் பல்கலை நிர்வாகம், பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் கேட்பதோடு, வாய்மொழித்தேர்வும் நடத்தி பதவி உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் வழக்கமாக எங்களுக்கு வரும் பணிமூப்பு பட்டியல் அடிப் படையிலான பதவி உயர்வு கிடைக்காமல் போகும். இந்நடைமுறையை பல்கலை நிர்வாகம் கைவிட வேண்டும்' என்றனர்.
துணைவேந்தர் விளக்கம்துணைவேந்தர் குமார் கூறுகையில், ''பணிமூப்புக்கு பணியாளர் தயாராக இருக்கிறாரா, அவரிடம் என்னென்ன திறமைகள் உள்ளன என்பதை அறிந்து, அதற்கேற்ப பணிமூப்பு வழங்கலாம். அதற்காக, பல்கலையில் அவர் பணியில் சேர்ந்த நாள் முதல் என்ன பணி மேற்கொண்டார், பணிக்காலத்தில் அவர் வேறு ஏதேனும் கற்றுத்தேர்ந்து வைத்திருக்கிறாரா என்பதை ஆய்வு செய்து, அவருக்கு தகுந்த பணி வழங்குவதற்காகவே கேட்கிறோம். எவ்வித எழுத்துத்தேர்வும் நடத்தப்போவதில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE