பொது செய்தி

தமிழ்நாடு

நடைபாதையில் செடி கொடி

Added : ஜன 05, 2021
Share
Advertisement
குடியிருப்புகளுக்கு மத்தியில் குப்பை கிடங்குசுந்தராபுரம், செங்கப்பக்கோனார் வீதி - பொள்ளாச்சி ரோடு, சந்திப்பில் உள்ள, காலி இடம் குப்பை கிடங்காக மாறி வருகிறது. இங்கு குவியும் குப்பையால், துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நாகரத்தினம், செங்கப்பக்கோனார் வீதி.துாய்மை பணியாளர்கள் வருவதில்லைராமநாதபுரம், ருக்மணி நகருக்கு துாய்மை பணியாளர்கள் வராததால்,

குடியிருப்புகளுக்கு மத்தியில் குப்பை கிடங்குசுந்தராபுரம், செங்கப்பக்கோனார் வீதி - பொள்ளாச்சி ரோடு, சந்திப்பில் உள்ள, காலி இடம் குப்பை கிடங்காக மாறி வருகிறது. இங்கு குவியும் குப்பையால், துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நாகரத்தினம், செங்கப்பக்கோனார் வீதி.

துாய்மை பணியாளர்கள் வருவதில்லைராமநாதபுரம், ருக்மணி நகருக்கு துாய்மை பணியாளர்கள் வராததால், சாலையோரம் குவிந்துள்ள குப்பை, மாதக்கணக்கில் அப்புறப்படுத்தப்படாமல் குவிந்துள்ளது.- கிருஷ்ணகுமார், ருக்மணி நகர்.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட, கணபதி, கே.கே.நகர் நான்காவது வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 1,338) கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.-பவித்ரன், கே.கே.நகர்.

சாலையை சீரமைக்கணும்மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்.மில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- பாலாஜி, ஜி.என்.மில்.

போக்குவரத்துக்கு இடையூறுசிட்ரா, சிவில் ஏரோட்ராம், பிருந்தாவன் நகரில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, சரியாக மூடப்படாததால், சாலை மேடு பள்ளமாக உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- அம்சவேணி, பிருந்தாவன் நகர்.

அம்பேத்கர் நகரில் வெளிச்சமில்லைகவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 11) கடந்த ஐந்து மாதத்துக்கும் மேலாக விளக்கு எரிவதில்லை.- மதுரை வீரன், அம்பேத்கர் நகர்.

சாக்கடை கால்வாய் அடைப்புதடாகம் ரோடு, இடையர்பாளையம் - வடவள்ளி ரோட்டில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-சஞ்சய், இடையர்பாளையம்.

பயனற்ற நடைபாதைஅவிநாசி ரோடு, லட்சுமி மில்ஸ் சிக்னல் திருப்பம் - பாரதியார் ரோடு செல்லும் வழியில் உள்ள, நடைபாதை செடி கொடிகளால், அடைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல், போக்குவரத்து நிறைந்த சாலையில் நெரிசலில் செல்கின்றனர்.- வேலுமணி, ராமநாதபுரம்.

சுகாதார சீர்கேடுசிங்காநல்லுார், வரதராஜபுரத்தில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சாலையில் ஓடுகிறது. நடந்து செல்ல வழியின்றி, மக்கள் அவதிப்படுகின்றனர்.- கண்ணன், வரதராஜபுரம்.

தெரு நாய்கள் தொல்லை அதிகம்பீளமேடு, பாரதி காலனி, மூன்றாவது வீதியில் உள்ள, நெசவாளர் சங்கம் அருகில், தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது; குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.-சவுந்தர், பாரதி காலனி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X