ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களாக இப்பகுதிகளில் பெய்த கன மழையால், மிளகாய் செடிகள் காய்கள் காய்க்கும்நிலையில் தண்ணீரில் மூழ்கி, ஏராளமான செடிகள்அழுகி மிளகாய் விவசாயம் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக சேத்திடல்,சீனாங்குடி, புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகஅளவில் மழைக்கு மிளகாய் செடிகள் பாதிப்படைந்துள்ளன. இந்த மிளகாய் வயல்களில் பாத்திகள் அமைத்து சமையலுக்கு பயன்படுத்தப்படும் குண்டு மல்லி செடிகளை விவசாயிகள் அதிகளவில் மகசூல் செய்துஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE