ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 775 ரேஷன் கடைகளில் 3,73,325 அரிசி கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2500 ரொக்கத்தொகை, பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது
ராமநாதபுரம் பாலசுப்பிரமணிய கோயில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வழங்கும்திட்டத்தை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.2500 வழங்க ரூ.93.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தினமும் 200 கார்டுதார்களுக்கு வழங்கப்படுகிறது என கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் மணிகண்டன் எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி, சதன்பிரபாகர் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.