மாணவர்கள் வீடு தேடி பாடம்: ஆசிரியர்கள் அசத்தல்

Added : ஜன 05, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
ராமேஸ்வரம் :தனுஷ்கோடியில் பள்ளி மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் நடத்தியஆசிரியர்கள் முயற்சியை,சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலில் சர்ச், கோயிலுடன் பள்ளி கட்டடமும் இடிந்து தரைமட்டமானது. இதன் பின் மீனவர் குழந்தைகள் கல்விக்காக 18 கி.மீ., துாரமுள்ள ராமேஸ்வரம் வந்த நிலையில், ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்கம் வலியுறுத்தலால் 2002ல் தனுஷ்கோடியில்
 மாணவர்கள் வீடு தேடி பாடம்: ஆசிரியர்கள் அசத்தல்

ராமேஸ்வரம் :தனுஷ்கோடியில் பள்ளி மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் நடத்திய

ஆசிரியர்கள் முயற்சியை,சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலில் சர்ச், கோயிலுடன் பள்ளி கட்டடமும் இடிந்து தரைமட்டமானது.



இதன் பின் மீனவர் குழந்தைகள் கல்விக்காக 18 கி.மீ., துாரமுள்ள ராமேஸ்வரம் வந்த நிலையில், ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்கம் வலியுறுத்தலால் 2002ல் தனுஷ்கோடியில் அரசு நடுநிலைபள்ளி துவக்கப்பட்டு தற்போது 65 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் உள்ளனர்.

ஊரடங்கினால் 9 மாதம் தனுஷ்கோடியில் பள்ளி கூடம் மூடியதால், மாணவர்கள் பெற்றோருக்கு உதவியாக தனுஷ்கோடி கடலில் கரை வலை, சிறியரக நாட்டுபடகில் மீன்பிடிக்கவும், மீன்களை தரம்பிரித்து வலைகளை உலர்த்தும் பணிக்கு சென்றதால், மாணவர்களின் கல்வி தரம் பாதித்தது.



இதனை தடுக்க பள்ளி தலைமை ஆசிரியை ஜேம்ஸ்ஜெயசெல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீடு தேடி சென்று பாடம் நடத்திட முடிவு செய்தனர். கடந்த 20 நாளுக்கு மேலாக தனுஷ்கோடி மாணவர்கள், பெற்றோருடன் வேலை செய்த மாணவர்களை தேடி அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, முகக்கவசம் அணிந்து பாடம் நடத்தி வருகின்றனர்.
மீனவ குழந்தைகளின் கல்வி தரம் மேம்பட வீடு தேடி பாடம் நடத்தி பிற ஆசிரியருக்கு முன்னுதாரமாக திகழும் தனுஷ்கோடி அரசு பள்ளி ஆசிரியருக்கு, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Bhaskaran - Chennai,இந்தியா
07-ஜன-202106:38:09 IST Report Abuse
Bhaskaran ஓராயிரம் வட்டி தொழில் வாத்தியார்கள் நடுவில் இம்மாதிரி sevai ullam கொண்ட ஆசிரியையும் இருக்கிறார் இவரை பார்த்தாவது மற்ற வட்டிக்காரராகள் திருந்தி வாழ கத்துக்கோங்கோ
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
05-ஜன-202109:22:39 IST Report Abuse
R.RAMACHANDRAN இப்படித்தான் இருக்க வேண்டும் ஆசிரியர்கள் சேவை.சம்பளத்தை குறியாகக் கொண்டு கபட நாடகமாடும் ஆசிரியர்களுக்கு மத்தியில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
05-ஜன-202107:22:48 IST Report Abuse
chennai sivakumar கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். அரசு பள்ளிகளில் வரும் மாணவர்களுக்கு ஒழுங்காக வகுப்புகள் எடுக்காத நிலையில் இது போன்று செயல்கள் செய்யும் ஆசிரியர்கள் நிச்சயமாக பாராட்ட பட வேண்டியவர்கள
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X