கோவை:தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு வினியோக பணி, கோவையில் நேற்று துவங்கியது.கெம்பட்டி காலனி பகுதியிலுள்ள ரேஷன் கடையில் துவக்கி வைத்து,அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''கோவையில் 1400 ரேஷன் கடைகள் மூலம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, திராட்சை, முந்திரி, ஏலக்காய், அடங்கிய தொகுப்பு 16.87 கோடி ரூபாய் மதிப்பிலும், ரொக்கமாக, 2500 ரூபாய் வீதம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 252.96 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு, வினியோக பணிகள் துவங்கியுள்ளது,'' என்றார்.டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரம் வாரியாக, பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுச்சென்றனர். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன், கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.